புதன், 29 பிப்ரவரி, 2012

10 ) சனிப்பெயர்ச்சி பலன்கள்...
மாநிலச்சனி எப்பவும் போல்
ஏழையின் வயிற்றில் அடிக்கும்
ஜென்மச் சனியாகவே உள்ளது.

மத்திய சனியிலோ
அமெரிக்க,ஐரோப்பிய
ராகு, கேதுக்கள் உடனிருப்பதால்
பேராபத்து வரும் நிலை
தொடர்ந்து நிலவுகிறது.

ஆட்சி அதிகார குரு பார்வை
வழக்கம் போல்
அம்பானி,டாடா கம்பெனிகளுக்கு
மிகவும் சாத்தியம்.

எதிர் காலத்தில்
இந்த சனியன்களின் பார்வை
உக்கிரமாய் இருப்பதால்
ஊறுகாய்,கடலை மிட்டாய்
வியாபாரத்தில்
அந்நிய முதலீடு அதிகமிருக்கும்.

எள் விற்பனை கூட அவர்கள் கையில்தான்.

ஆண்டையின் திசை நோக்கியே இருக்கும்
சுக்கிரன் போக்கை மாற்றியமைத்தாலொழிய
நல்லது நடக்க வாய்ப்பில்லை.

பார்வைத் திறனை
விசாலப் படுத்திக்கொள்வது அவசரம்.

அந்நேரம்
விளக்கெண்ணை வியாபாரத்தில்
அவர்கள் குறுக்கிட்டாமல்
பார்த்துக்கொள்வது மிக அவசியம்.


-கவி.பாலா,
புதுக்கோட்டை.
9597005848
கருத்துரையிடுக